மொழித்தெரிவு :
தமிழ்
English

ஆன்மிக சிந்தனைகள்

aanmika chinthanaikal naam anaivarum vilakkukalaip poala pirarukku oli koduththu payanulla vaalkkai vaalvom.

ஆன்மிக சிந்தனைகள்
7

* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.

* பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.

* நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.

* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.

* உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.

* நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.

* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.


மேலும் சிந்தனைத்துளி

Tags : ஆன்மிக, சிந்தனைகள், ஆன்மிக சிந்தனைகள், aanmika chinthanaikal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]