மொழித்தெரிவு :
தமிழ்
English

டுவிட்டரில் டோக்கியோ மின் சக்தி நிறுவனம்

duviddaril dokkiyoa min chakthi neruvanam nelanadukkam kaaranamaaka jappaanel paathikkappadda anu ulaikalai iyakkum neruvanamaana dokkiyoa min chakthi neruvanam duviddar kanakkonrinai aarampiththullathu.

டுவிட்டரில் டோக்கியோ மின் சக்தி நிறுவனம்
3 நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் பாதிக்கப்பட்ட அணு உலைகளை இயக்கும் நிறுவனமான டோக்கியோ மின் சக்தி நிறுவனம் டுவிட்டர் கணக்கொன்றினை ஆரம்பித்துள்ளது.

ஆரம்பித்த சில நாட்களிலேயே இதன் கணக்கினை இலட்சக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

அணு உலைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கதிர் வீச்சு தொடர்பான தகவல்களையும் இக் கணக்கின் ஊடாக வழங்கவுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனமனது பல செய்திச் சேவைகளின் டுவிட்டர் கணக்குகளை பின் தொடர்வதாகவும் உடனுக்குடன் செய்திகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமது அணு உலைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக அந் நிறுவனம் தனது டுவிட்டர் கணக்கின் புரொபைலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Tags : டுவிட்டரில், டோக்கியோ, மின், சக்தி, நிறுவனம், , டுவிட்டரில் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் , duviddaril dokkiyoa min chakthi neruvanam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]