மொழித்தெரிவு :
தமிழ்
English

ஆடி வெள்ளி

aadi velli allik kodukkum chukkiranukkuriya vellikkilamaiyanru, thulliththiriyum chinkaththin maelae aeri pavane varum thooyavalaam ampikaiyai valipaddaal

ஆடி வெள்ளி
9

கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும் சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன் கொடுக்கும் மாதமாகும்.

"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி!" "ஆடிப்பட்டம் தேடி விதை!" "ஆடிப்பெருக்கு கோடியாய்ப் பெருகும்!" என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் ஆண்டில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்யகாலமாகும். இது தேவர்களின் இரவுநேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

எனவே, ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டு பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒருசந்தி கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர். இதன்மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் ஏற்படும்.

ஆடி வெள்ளியன்று திருவிளக்குப் பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.

ஆடி அமாவாசையன்று கடல் அல்லது நதியில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன்மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று, சுபகாரியங்கள் முடிவடையும்.

ஆடி வெள்ளியன்று நாம் இலக்குமியை வழிபட்டால், பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அருளோடு வரும் பொருள்தான் என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் இலக்குமி என்றும் திருமகள் என்றும் வர்ணிக்கிறோம். எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால், நாம் திட்டமிட்டபடியே வாழ்க்கையை நடத்த இயலும்.

அங்ஙனம், வரம் கொடுக்கும் லட்சுமியை "வரலட்சுமி" என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையாகும். அன்று தினம் அதிகாலையில் வீட்டை மெழுகி, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, இலக்குமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் இலக்குமிக்குரிய தாமரைக் கோலமிட்டு "திருமகளே வருக!" என்று கோலமாவினால், எழுதலாம்.

பூஜை அறையில் வரலெட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐமுக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி, பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி, அதன் மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும். பூ சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்து, இலக்குமி படத்தின் முன்னால் வைக்க வேண்டும். சந்தனம், குங்குமப் பொட்டு குடத்திற்கு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்யத்தோடு லெட்சுமி கவசம், லெட்சுமி வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால், பணத் தேவைகள் நிறைவு பெறும்.


மேலும் ஆன்மிகம்

Tags : ஆடி, வெள்ளி, ஆடி வெள்ளி, aadi velli

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]