மொழித்தெரிவு :
தமிழ்
English

சுக்கிர பலம் பெருக

chukkira palam peruka chanthiran, puthan, kuru, chukkiran aakiya naalvarum chupakkirakankal. ivarkalin chukkiraman palam rompavae athikam.

சுக்கிர பலம் பெருக
10


நல்ல இனிமையான வாழ்வு வாழ ஆசைப்படாதவர்களும் உண்டா? என்ன? சுகமான வாழ்வு கிடைக்க ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சுபக்கிரகங்கள். இவர்களின் சுக்கிரமன் பலம் ரொம்பவே அதிகம். சுக்கிர பகவானை 'களத்திரகாரகன்' என்று அழைப்பர். சுகபோகங்களை அனுபவிக்க, ஊர் மதிக்க, நல்ல மரியாதையோடு வாழ. நல்ல இல்லறம் அமைய, சுக்கிர பலம் அவசியம்.

ஜாதகத்தில் குடும்பம், தனம் மற்றும் கல்வி ஸ்தானமான 2-ஆம் இடம் நன்கு அமைந்திருந்தால், குடும்பம் என்கிற வண்டி நன்றாக ஓடும். கையில் பணம், கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். 7ஆம் இடம் களத்திர ஸ்தானம். இதில் பாபகிரகங்கள் எதுவுமின்றி, பகை நீச்சம் பெறாமல், சுக்கிரனும் இடம் பெறாமல் இருந்தால்… அவர்களின் வாழ்வில் சுக்கிர யோகம்தான்!

ஒருவரின் ஜாதகத்தில், தனசப்தமாதிபதி எனப்படும் இரண்டாம் வீட்டோனும், ஏழாமிடத்தோனும் பலமுடன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று அல்லது நட்புடன் அமைந்திருந்தால், மனைவியின் வருகைக்குப் பிறகு மிகப்பெரிய யோகக்காரராக மாறுவர்! அதாவது திருமண வாழ்வு திருப்பம் தரும். அதுபோன்ற ஜாதகத்தை 'களத்திரயோக ஜாதகம்' என்பர்.

இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு அனைத்திலும் வெற்றி, வெற்றி தான்! நினைப்பது நடக்கும். கேட்பது கிடைக்கும். அழகிய மனைவி, நல்ல இல்லம், வாகன வசதி உண்டு.

பெண்களுக்கு 7ஆம் வீடு – மாங்கல்ய ஸ்தானம்! இந்த வீடு நன்றாக இருந்தால், கணவருக்குச் சகல செல்வங்களும் வரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் இருக்கும்.

மற்றொரு விஷயம். திருமணப் பொருத்தத்தில் வேதை பொருத்தம் என ஒன்று உண்டு. வேதை என்றால் தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் இருப்பின், மணமுறிவு ஏற்படாது என்கிறது ஜோதிட நூல்கள். ராசிப் பொருத்தமானது 2, 4, 7, 9, 11 என வந்தால், அவர்கள் கருத்தொருமித்து வாழ்வர். விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லறம் நல்லறமாகும். எல்லாவற்றுடன், பூர்வ புண்யஸ்தானமும் நன்றாக அமைந்திருப்பது நலம் பயக்கும்.

இப்படியெல்லாம் ஜாதகம் அமைப்பு இல்லாவிட்டால் கவலை வேண்டாம். எளிய வழிபாடுகளால் நாம் இறைவனின் திருவருளைப் பெறலாம்.

சிவபூஜையில் ஈடுபடுவதும், சிவனடியார்களை உபசரிப்பதும் சுக்கிரனுக்குப் பிடித்தமானவை. ஆகவே சிவனை துதித்தால் சுக்கிரபலம் பெருகும்.

பெண்கள் சுக்கிரவார விரதம் அனுஷ்டிக்கலாம். அதிகாலையில், வாசனைத் திரவியங்களால் வீட்டை சுத்தம் செய்து, சாம்பிராணி மற்றும் ஊதுபத்தி ஏற்றுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில், விளக்கு பூஜை செய்வது நல்ல பலன் தரும். அந்த சமயத்தில் ஸ்ரீமகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம், ஸ்ரீலட்சுமி துதி, ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி, அம்பிகையை தீப ஒளியில் வணங்கினால் கணவன்-மனைவி உறவு நல்ல முறையில் அமையும்.

அம்பிகையை வெண்தாமரை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு வாய்ந்தது. மொச்சை சுண்டல் தானம் செய்து குடும்ப ஒற்றுமைக்கு வலுவூட்டும். சுமங்கலிகளை வரவேற்று, அவர்களுக்கு தாம்பூலம் தந்து மகிழ்வது மாங்கல்ய பலத்தைத் தரும்.
சுகாசினி பூஜை, சுமங்கலி பூஜை, குமாரி பூஜை என சுக்கிர பூஜைகள் பல உண்டு. பௌர்ணமி நாளில், ஸ்ரீசத்ய நாராயணா பூஜை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீசந்தோஷி மாதா விரதம் இருப்பதும் விசேஷ பலனைத் தரும்.
ஸ்ரீசுக்கிர பகவான் வழிபட்ட தலங்களுக்கு சென்று, இறைவனைத் தரிசித்து வழிபடுவதும் சுக்கிர பலத்தை கூட்டும்.


மேலும் ஆன்மிகம்

Tags : சுக்கிர, பலம், பெருக, சுக்கிர பலம் பெருக, chukkira palam peruka

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]