மொழித்தெரிவு :
தமிழ்
English

சகிப்பு

chakippu un kankalaith thiranthu unnaich churri irukkum makkal eppadippadda vishayankalaiyellaam chakiththukkondu vaalkiraarkal

சகிப்பு
2

உன் கண்களைத் திறந்து உன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் எப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று பார். எண்ணற்ற மக்கள் கஷ்டப்படுவதைப் பார். ஒரு வேளை உணவு கூட இல்லாமல் எத்தனையோ பேர் இன்னலுறும் போது நீ கஷ்டம் என்று பேசலாமா? உன்னுடைய தட்டு நிரம்பியிருக்கும் போது இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள். அவர்களுக்கு இல்லாமை நீங்க வேண்டும் என்று மனதார வாழ்த்து.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் ஆத்மாவுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளாததுதான். எந்த இடமாயினும் சரி, எந்த மதமாயினும் சரி, ஒருவன் தன் ஆத்மாவுடன் முழுமையாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால், அவனுக்கு எந்தவிதக் குழப்பமும் நேராது. அவன் எப்பொழுதும் பிறரிடம் அன்பாய் இருப்பான். புன்னகை மாறாமல் பழகுவான். மற்றவர்களின் சுமைகளைத் தானாகவே மனமுவந்து ஏற்றுக்கொள்வான். அவன் தன்னை நேசிக்காமல் தன் ஆத்மாவை நேசிப்பான். அவன் எல்லோருள்ளும் இருப்பது ஒரே ஆத்மா என்று உணர்வதால், எல்லோரையும் சமமாக நேசிக்கிறான். இந்த உலகத்திற்கு நீ செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி என்னவென்றால், நீ உன்னை அறிந்துகொள்வதுதான். அதுவரை நீ பிறர் நன்மை பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்.


மேலும் சிந்தனைத்துளி

Tags : சகிப்பு, சகிப்பு, chakippu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]