மொழித்தெரிவு :
தமிழ்
English


நவராத்திரி

navaraaththiri theemaikalai aliththu nallavaikalai nelainaaddupavalaakak karuthappadukiraal thurkai.

நவராத்திரி

இந்துக்கள் கொண்டாடும் விழாக்களில் மிக முக்கியமான விழாக்களில் தீபாவளி, பொங்கல் பண்டிகையைப் போல் நவராத்திரி பண்டிகையும் கோலாகலமானது; சிறப்பானது. இது பொதுவாக மங்கையர்களுக்கான விழாவாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்த விழா தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வட இந்தியா உட்பட மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் இதனைக் கொண்டாடுவதால், இதனை நவராத்திரி என்று அழைக்கின்றனர். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இதனை தசரா விழாவாகவும், வட மாநிலங்களில் துர்கா பூஜையாகவும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலிலும் மிக விசேஷமாக இவ்விழாவினைக் கொண்டாடுவார்கள். அதனையொட்டி "மைசூர் அரண்மனை" யே விழாக்கோலம் பூண்டிருக்கும். முக்கியமாக அனைத்து சக்தி பீடங்களிலும், மிக விமரிசையாகக் கொண்டாடுவர். வங்கத்தில் இதனை துர்கா பூஜையாகக் கொண்டாடுவர். இங்கு தீமைகளை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவளாகக் கருதப்படுகிறாள் துர்கை.

தமிழகத்தில் நவராத்திரி:

நவராத்திரி விழாவானது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று ஆரம்பிக்கிறது. விழாவின் ஒன்பது நாட்களிலும், முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியாகிய துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பூஜிப்பது வழக்கம். முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக இவர்களை ஒப்பிடுவர். முதலில் உள்ள துர்க்கையாகிய பார்வதி தேவியை வீரத்திற்கும், நடுவிலுள்ள லக்ஷ்மி தேவியை செல்வத்திற்கும், இறுதியில் உள்ள சரஸ்வதி தேவியை கல்விக்கும் அதிபதியாக நாம் கொண்டாடுகிறோம்.

நவராத்திரியின் அடுத்த பகுதியாக நாம் பார்க்க இருப்பது வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு வைப்பது. இது பாரம்பரியமாக, தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் மிக நேர்த்தியாகவும், அதில் ஓர் அர்த்தம் பொதிந்துள்ளதாகவும் அமைத்திருக்கின்றனர் என்பது சிறப்பு. கொலுவை 5, 7 அல்லது 9 படிகள் என்றவாறு அமைப்பார்கள். முதலில் கீழே கல், மண் போன்ற அஃறிணைப் பொருட்களாலான பார்க் போன்றவற்றையும், அதிலேயே சில விதைகளைத் தூவி செடி, கொடிகள் போன்றும் அமைப்பார்கள். பிறகு முதல் படியில் ஓரறிவு உள்ள ஜீவன்கள் முதல் ஆறரிவு படைத்த மனிதர்கள் வரையிலான பொம்மைகளை அடுக்கி வைப்பார்கள். மனிதர்கள் என்றாலும் அதிலும் பல்வேறு வகையான மனிதர்களின் பொம்மைகளை, (செட்டியார், பாம்பாட்டி, குறவன், குறத்தி போன்று பல்வேறு வகையினர்) அடுக்குவார்கள்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

இவை எல்லாவற்றிற்கும் அடுத்ததாக, தெய்வங்களின் பொம்மைகளை அடுத்தடுத்த படிகளில் இடம்பெறச் செய்வார்கள். எல்லாவற்றிற்கும் மேலே உள்ள படியில் முப்பெரும் தேவிகளாம் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய தேவியர்களின் பொம்மைகளை இடம் பெறச் செய்வார்கள்.

மேலும் கொலு வைத்தவர்களின் வீடுகளில் ஒவ்வொரு நாள் மாலையும் விளக்கேற்றி, தெரிந்தவர்களைக் கூப்பிட்டு, இறைவனைக் குறித்துப் பக்திப் பாடல்களைப் பாடச்செய்து, சுண்டல் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர். இதன் மூலம் ஒரு சமத்துவம் அனைவருக்குள்ளும் மலரச் செய்து ஏற்றத்தாழ்வு மறையும் விழாவாகவும் இவ்விழா அமைகிறது. மேலும் இவ்விழாவில் சிறுவர்களும் பங்கு கொள்வதால் அவர்களுக்கு நம் நாட்டின் பழக்க வழக்கம், பாரம்பரியம் ஆகியவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
நவராத்திரியில், முதல் நாள் தொடங்கி சுவாசினி, வாராஹி, கௌமாரி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை ஆவாஹனம் செய்து அந்தந்த தேவதைகளுக்குரிய மலர், பூஜை முறை மற்றும் நைவேத்தியப் பொருட்கள் மற்றும் அவற்றிற்குரிய அலங்காரம் செய்து அந்தந்த தெய்வங்களை வணங்குவது முறையாகும். இதுவும் நவராத்திரி விழாவின் ஒரு முக்கிய அம்சமாகும்.
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களான, சரஸ்வதி தேவிக்குரிய நாட்களில்தான் சரஸ்வதி பூஜை வருகிறது. அதற்கு அடுத்த நாளான விஜய தசமியன்று குழந்தைகளை குருகுலத்தில் சேர்ப்பதற்குரிய முக்கிய நாளாகும். இந்த நாள் தமிழ்நாட்டின் கூத்தனூரில் குடிகொண்டுள்ள சரஸ்வதி கோவிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு முதன் முதலில் அட்சராப்யாசம் செய்து வைத்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

மேலும், ஆயுத பூஜை அன்று ஆயுதங்குளுக்கு பூஜை செய்வதும் மிகவும் சிறப்பான ஒன்று. நம் முன்னோர்கள், நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைக்கூட மிகவும் முக்கியமானதாகக் கருதி, அவற்றை அஃறிணைப் பொருட்கள் என்று கருதி அவற்றைத் தள்ளிவிடாமல், அவற்றிற்கும் சிறப்பான ஓர் இடத்தைக் கொடுத்துள்ளனர். இது இந்துமதத்தின் மிகச் சிறப்பான ஒரு வழக்கமாகும்.
நவராத்திரி விழாவானது முப்பெரும் தேவிகளுக்குரிய ஒரு சிறப்பான, முழுமையான விழாவாகும். அனைவரும் இந்த நவராத்திரி விழாவினைக் கொண்டாடி அதற்குரிய பலன்களைப் பெறுவோமாக!!


மேலும் ஆன்மிகம்

Tags : நவராத்திரி, நவராத்திரி, navaraaththiri

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]