மொழித்தெரிவு :
தமிழ்
English


மன நிறைவு

mana neraivu athikamaakap poarulkalaith thaedippoavathaal vaalkkaiththaram uyarnthuvidaathu. unmaiyil vaalkkaiththaram enpathu veli poarudkalin perukkaththil illai. tharamaana vaalkkai mana neraivodu iruppathuthaan.

மன நிறைவு

அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி பொருட்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான்.

* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள் தான்.

* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் தூண்டுகிறது.

* மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு கடவுளைத் துணை கொள்வதே முக்கியம்.

* அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்தமாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் யாருக்கும் உதவாது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

* ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி தர்மம் ஒன்றுதான்.

* ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த கடவுளேயே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.

* எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.

* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : மன, நிறைவு, மன நிறைவு, mana neraivu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]