மொழித்தெரிவு :
தமிழ்
English


கல்யாணம் காதல்

kalyaanam Kadhal Kadhalikkumpoathu oor vishayankalaip parri Kadhalarkal paechuvaarkal. thirumanaththirkup piraku ivarkalaip parri oorae paechum

கல்யாணம் காதல்

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்.

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்.

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடு முரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரே பேசும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும் தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்..


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : கல்யாணம், காதல், கல்யாணம் காதல், kalyaanam Kadhal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]