மொழித்தெரிவு :
தமிழ்
English


ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்

oru elumichchai palam 3,500 roopaay viluppuram arukae, murukan koavil vaelil vaiththiruntha oru elumichchai palam 3,500 roopaaykku aelam poanathu.

ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்
விழுப்புரம் அருகே, முருகன் கோவில் வேலில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்க்கு ஏலம் போனது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு, வேல் மட்டுமே கருவறையில் உள்ளது. இதற்கு, இப்பகுதி மக்கள் ரத்தினவேல் முருகன் என பெயரிட்டுள்ளனர்.

இக்கோவிலில், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், (20ம் தேதி) இரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இப்பூஜையில், ஒன்பது நாள் உற்சவத்தின் போது வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன் திருமணத் தடைகள், நோய்கள் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால், இப்பகுதி மக்கள் போட்டி போட்டு பழத்தை ஏலம் எடுத்தனர்.

முதல் நாள் எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்க்கும், இரண்டாம் நாள் பழம் 500, மூன்றாம் நாள் பழம் 375, நான்காம் நாள் பழம் 155, ஐந்தாம் நாள் மற்றும் ஆறாம் நாள் பழம் தலா 700 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
தொடர்ந்து, ஏழாம் நாள் பழம் 1,001 ரூபாய்க்கும், 8ம் நாள் பழம் 775, 9ம் நாள் பழம் 1,001 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த ஆண்டு, வேலில் செருகப்பட்ட முதல் நாள் பழத்தை, 51 ஆயிரம் ரூபாய்க்கு பண்ருட்டி தாலுகா, எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஹரி-ரேகா தம்பதியினர் ஏலம் எடுத்தனர். இதே போல், 2009ம் ஆண்டு 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு ஏலம் எடுத்த மும்பை முருகன் – விமலா தம்பதியினருக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன.

அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினர். இக்கோவிலில் பழம் ஏலம் எடுத்து சாப்பிட்ட பல தம்பதியினர், குழந்தையுடன் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை பாலகிருஷ்ணன், பூசாரி ஜீவா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Tags : ஒரு, எலுமிச்சை, பழம், 3,500, ரூபாய், ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய், oru elumichchai palam 3,500 roopaay

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]