மொழித்தெரிவு :
தமிழ்
English

ருத்ராட்சம்

ruthraadcham thuravikal, munevarkal, rishekal, ulaka vaalkkaiyaith thuranthavarkal, thavaththil aalnthavarkal aakiyoar pinparrum nadaimuraiyai naam pinparra vaendiya kaddaayam illai. inraiya chamuthaayaththil ulaka chukankalaip purakkaneththu vaalvathu iyalaathu.

ருத்ராட்சம்
10

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம் உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலையை அணியும் முறை

குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 108.

ருத்ராட்ச வடிவங்கள்

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்

ருத்ராட்சையின் பிற பெயர்கள்

ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.

ருத்ராட்ச சிவலிங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.

ருத்ராட்சத்தால் ஆன அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

ருத்ராட்சம் பலன்கள்

உருத்திராட்சம்பலன்கள்

ruththiraka palankal
ruththiraka palangal

இதையும் படித்துப்பாருங்கள்
உண்மையான ருத்ராட்சம்

மேலும் ஆன்மிகம்

Tags : ருத்ராட்சம், , ருத்ராட்சம் , ruthraadcham

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]