மொழித்தெரிவு :
தமிழ்
English


மரத்துக்கு மரம் தாவும் ஆதிவாசிகள்

maraththukku maram thaavum aathivaachikal theppakkaadu vanaththil payirchi perra 6 aathivaachikal, neelakiri kaanuyir chankaththinar marrum vanaththuraiyinar ullidda 40kkum maerpaddo kadantha 4 naadkalaaka

மரத்துக்கு மரம் தாவும் ஆதிவாசிகள்
ஊட்டி மலைப்பாதையில் சுற்றித்திரியும் யானைகளை மரத்துக்கு மரம் தாவும் ஆதிவாசிகளை கொண்டு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கிறது.

கோடை சீசன் நெருங்கும் நிலையில் யானைகள் முற்றுகை, சுற்றுலா பயணிகளை பீதிக்குள்ளாக்கி வருகிறது. குன்னூர் பகுதியில் மலைப்பாதை அருகே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு குட்டி உள்ளிட்ட 4 யானைகள் குன்னூர் மலைப்பாதையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.

யானைகளை விரட்ட, வனத்துறையினர் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். ஆனாலும் யானைகளை விரட்ட முடியவில்லை. இவற்றை விரட்டியடிக்க புது முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.

தெப்பக்காடு வனத்தில் பயிற்சி பெற்ற 6 ஆதிவாசிகள், நீலகிரி கானுயிர் சங்கத்தினர் மற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கடந்த 4 நாட்களாக யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிவாசிகள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்கு தாவி இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
யானைகளை விரட்டும் முயற்சியில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 6 யானைகள் அடங்கிய மற்றொரு கூட்டம் குன்னூர் பகுதியில் நுழைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Tags : மரத்துக்கு, மரம், தாவும், ஆதிவாசிகள், மரத்துக்கு மரம் தாவும் ஆதிவாசிகள், maraththukku maram thaavum aathivaachikal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]