மொழித்தெரிவு :
தமிழ்
English


ஜப்பானிய கதிர்வீச்சு கனடாவுக்கு பரவியது

jappaaneya kathirveechchu kanadaavukku paraviyathu piriddish kolampiyaa kadarparai pakuthiyil mika chiriya alavu kathirveechchu ullathu ena kanadaa chukaathaarath thurai kandarinthullathu.

ஜப்பானிய கதிர்வீச்சு கனடாவுக்கு பரவியது
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரை பகுதியில் மிக சிறிய அளவு கதிர்வீச்சு உள்ளது என கனடா சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. ஜப்பான் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவல் காரணமாக இந்த கதிர்வீச்சு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ளது. இது அபாயகரமான அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் இந்த மார்ச் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு மின்நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது. இந்த கதிர்வீச்சு பரவல் ஜப்பானையடுத்து உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடற்கரை பகுதிகளிலும் சிறிய அளவு அதிகரித்துள்ளது.

இது குறித்து கனடா சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் காரி ஹோலப் கூறுகையில்,"கதிர்வீச்சு நிலை எதிர்பார்த்த அளவிலேயே உள்ளது. கனடாவில் மழை பொழியும் போது ஏற்படும் கதிர்வீச்சு அளவே தற்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சால் கனடியர்கள் உடலுக்கு அபாயமில்லை" என்றார்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
கதிர்வீச்சை கண்காணிக்க கடந்த வாரம் இறுதியில் கனடா சுகாதாரத்துறை மேற்கு கடலோரப்பகுதிகளில் மேலும் கடலோர கண்காணிப்பு மையங்களை நிறுவியது. ஜப்பான் கதிர்வீச்சு தாக்கம் பெருமளவு இல்லாத போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

கதிர்வீச்சு பாதிக்காமல் இருக்க பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் மூக்கை மூடிக்கொள்ளும் துணியை அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.


மேலும் செய்திகள்

Tags : ஜப்பானிய, கதிர்வீச்சு, கனடாவுக்கு, பரவியது, ஜப்பானிய கதிர்வீச்சு கனடாவுக்கு பரவியது, jappaaneya kathirveechchu kanadaavukku paraviyathu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]