மொழித்தெரிவு :
தமிழ்
English

சவ ஊர்வலத்தில் மோதல் நாய் சேகர் ஓட்டம்

chava oorvalaththil mothal naay chaekar oaddam chava oorvalaththil 2 ravudikalukkul mothal aerpaddathu. ithil oru ravudiyaana aaddo diraivarai veddik kolai cheytha naay chaekar kumpalai poaleechaar

சவ ஊர்வலத்தில் மோதல் நாய் சேகர் ஓட்டம்
3சவ ஊர்வலத்தில் 2 ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு ரவுடியான ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொலை செய்த நாய் சேகர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிட்லபாக்கம், எம்ஜிஆர் நகர், தாங்கல்கரை தெருவை சேர்ந்தவர் அன்பு (எ) அன்பழகன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காந்திமதி (30). இவர்களது மகன்கள் அஸ்வின் (6), சதீஷ் (4).

சிட்லபாக்கம், வரதராஜா தியேட்டர் அருகே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோவை அன்பு நிறுத்துவது வழக்கம். நேற்று காலை அவர் ஸ்டாண்டுக்கு வந்தார். மதியம் 12 மணியளவில் ஒருவர் சானடோரியம் வரை செல்ல சவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பும்போது, சானடோரியம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் 2 பைக்குகளில் வந்த ஒரு கும்பல், ஆட்டோ மீது திடீரென மோதியது. இதனால் ஆட்டோவில் இருந்து இறங்கிய அன்பு, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அன்புவை வெட்ட பாய¢ந்தனர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னால் விரட்டிச் சென்ற அந்த கும்பல், அன்புவை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அதே இடத்தில் இறந்தார். கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவல் அறிந்து சிட்லபாக்கம் போலீசார் வந்தனர்.

அன்புவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை செய்யப்பட்ட அன்பு மீது சிட்லபாக்கம் போலீசில் ஏற்கனவே அடிதடி வழக்குகள் உள்ளன. ரவுடி லிஸ்டில் உள்ளவர். எனவே முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

இதில், சில தினங்களுக்கு முன்பு கிழக்கு தாம்பரத்தில் நடந்த சவ ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் அன்புவுக்கும் நாய் சேகர் என்பவருக்கும் அடிதடி ஏற்பட்டது. மற்றவர்கள் சமரசம் செய்து அனுப்பினர். இதையடுத்து, நாய் சேகர் தலைமையில் 6 பேர் கும்பல் வந்து வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நாய் சேகர் உட்பட 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Tags : சவ, ஊர்வலத்தில், மோதல், நாய், சேகர், ஓட்டம், சவ ஊர்வலத்தில் மோதல் நாய் சேகர் ஓட்டம், chava oorvalaththil mothal naay chaekar oaddam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]