மொழித்தெரிவு :
தமிழ்
English

ஜப்பான் உணவகளில் கதிர்வீச்சு பரவியுள்ளது

jappaan unavakalil kathirveechchu paraviyullathu jappaanel thanneer, paal marrum unavu poarudkalilum kathirveechchu paraviyullathu. ivarrai manetharkal chaappiddaal avarkalaiyum kathirveechchu paathikkum apaayam aerpaddu ullathu. enavae kathirveechchu paathiththa poarudkalai aliththu varukinranar.

ஜப்பான் உணவகளில் கதிர்வீச்சு பரவியுள்ளது
2 ஜப்பானில் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது. இவற்றை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களையும் கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கதிர்வீச்சு பாதித்த பொருட்களை அழித்து வருகின்றனர்.

ஜப்பானில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்களிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஜப்பானில் இருந்து வரும் உணவு பொருட்களை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜப்பானில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. ஜப்பான் உணவு பொருளுக்கு அமெரிக்காதான் முதல் முறையாக தடை விதித்து உள்ளது.

சிங்கப்பூர், ஜப்பானில் இருந்து பால் உணவு மற்றும் இறைச்சிகளை இறக்குமதி செய்து வந்தது. அணு கதிர்வீச்சு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பொருட்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்து உள்ளது.

அதே போல ஆஸ்திரேலியாவும் தடை விதித்து உள்ளது. கனடா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, நெதர்லாந்து, சீனா நாடுகளில் ஜப்பான் பொருட்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.


மேலும் செய்திகள்

Tags : , ஜப்பான், உணவகளில், கதிர்வீச்சு, பரவியுள்ளது, ஜப்பான் உணவகளில் கதிர்வீச்சு பரவியுள்ளது, jappaan unavakalil kathirveechchu paraviyullathu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]