மொழித்தெரிவு :
தமிழ்
English


500 பவுண்ட் குண்டுகளை வீசி பைலட் காப்பாற்றப்பட்டார்

500 pavund kundukalai veechi pailad kaappaarrappaddaar lipiyaavil paaraachood moolam tharaiyirankiya pailad marrum veerarai meedka, amerikka padaiyinar 500 pavund kundukalai veechiya champavam charchchaiyai aerpaduththi yullathu.

500 பவுண்ட் குண்டுகளை வீசி பைலட் காப்பாற்றப்பட்டார்
லிபியாவில் பாராசூட் மூலம் தரையிறங்கிய பைலட் மற்றும் வீரரை மீட்க, அமெரிக்க படையினர் 500 பவுண்ட் குண்டுகளை வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்திய லிபியா மீது ஐ.நா.கூட்டுப்படைகள் கடந்த 19ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. லிபியாவின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ மையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் லிபியாவில் தாக்குதல் நடத்த இத்தாலியில் உள்ள ஏவியனோ விமானப்படை தளத்திலிருந்து அமெரிக்க போர் விமானம் ஒன்று கடந்த திங்கள்கிழமை புறப்பட்டது. அதில் பைலட் உடன் மற்றொரு அதிகாரியும் பயணம் செய்தார். லிபியாவின் பெங்காசி பகுதியில் இரவு 11.30 மணியளவில் விமானம் பறந்தபோது, திடீரென பழுதானது. இதனால் பைலட்டும், மற்றொரு அதிகாரியும் பாராசூட் மூலம் குதிக்க முடிவு செய்தனர். இது குறித்து மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். கேயர்சர்கே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் பைலட்.

தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட அமெரிக்க மீட்பு குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பைலட்டின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அந்த இடத்தை லிபியா ராணுவத்தினர் நெருங்காமல் இருக்க, குண்டு வீசும் பணியில் அமெரிக்காவின் ஹேரியர் ரக போர் விமானங்கள் ஈடுபட்டன. அப்போது ஹெலிகாப்டரில் தரையிறங்கிய மீட்பு குழுவினர் பைலட் மற்றும் அதிகாரியை மீட்டனர். தற்போது அவர்கள் அமெரிக்க போர்க்கப்பலில் பாதுகாப்பாக உள்ளனர்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இந்த மீட்பு நடவடிக்கையில் அமெரிக்க போர் விமானங்கள் 500 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை பெங்காசி பகுதியில் வீசியுள்ளனர். இதில் அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. மீட்பு படையினர் சுட்டதில் கிராம மக்கள் 6 பேர் பலியானதாக இங்கிலாந்தின் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது. ஆனால் இதை அமெரிக்க ராணுவத்தினர் மறுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Tags : 500, பவுண்ட், குண்டுகளை, வீசி, பைலட், காப்பாற்றப்பட்டார், 500 பவுண்ட் குண்டுகளை வீசி பைலட் காப்பாற்றப்பட்டார், 500 pavund kundukalai veechi pailad kaappaarrappaddaar

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]