மொழித்தெரிவு :
தமிழ்
English


வடிவேலுக்கு விஜயகாந்த் பதில்

vadivaelukku vijayakaanth pathil vadivaelu unkalai parri thaneppadda muraiyil thaakki paechiyirukkiraarae?

வடிவேலுக்கு விஜயகாந்த் பதில்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் 24.03.2011 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விஜயகாந்த் பதில் அளித்தார்.

கேள்வி: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்: சூப்பராக இருக்கிறது. எனக்கு எந்த பயமும் இல்லை.

கேள்வி: அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி; அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தலை பார்த்து எங்களுக்கு பயமில்லை.

கேள்வி: பிரசாரம் எதை முன்நிறுத்தி இருக்கும்?
பதில்: ஒரு போர் என்றால் பாகிஸ்தானுடன் இந்தியா போரிடும்போது வெற்றிக்காக தேவைக்கேற்ப வியூகங்கள் இருக்கும். அதுபோன்று தான் இந்த தேர்தலிலும் இருக்கும்.

கேள்வி: உங்களின் பிரசார வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: பிரசாரத்தின் போது தான் தெரியும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
கேள்வி: ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் கூட்டு பிரசாரம் மேற்கொள்வீர்களா?
பதில்: இப்போது எப்படி சொல்ல முடியும். நான் என்ன ஜோசியம் படித்திருக்கிறேனா? கணித்து சொல்வதற்கு. அது அந்தந்த நேரத்தில் நடக்கும். பிரசாரம் இணைந்தோ, இல்லையோ அதை பார்க்காதீர்கள். வெற்றியை மட்டும் பாருங்கள். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. நிச்சயம் வெற்றி பெறுவோம்.

கேள்வி: ரிஷிவந்தியத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?
பதில்: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் போக விருப்பம். எல்லா தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்காக முதலில் பணியாற்ற தற்போது ரிஷிவந்தியத்தை தேர்வு செய்துள்ளேன். தொடர்ந்து பல இடங்களில் போட்டியிட்டு பணியாற்றுவேன்.

கேள்வி: வடிவேலு உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருக்கிறாரே?
பதில்: அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. என்னை பற்றி மக்களுக்கு தெரியும் என்றார்.


மேலும் செய்திகள்

Tags : வடிவேலுக்கு, விஜயகாந்த், பதில், வடிவேலுக்கு விஜயகாந்த் பதில், vadivaelukku vijayakaanth pathil

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]