மொழித்தெரிவு :
தமிழ்
English

வடிவேலு எந்நேரமும் கைது செய்யப்படலாம்

vadivaelu ennaeramum kaithu cheyyappadalaam vijayakaanthai, thiruvaaroor thi.mu.ka., kooddaththil tharakkuraivaaka paechiya vadivaelu meethu jameenel velivara mudiyaatha pirivin keel valakku pathivu cheyyappaddullathu. ithanaal avar ennaeramum kaithu cheyyappadalaam enru koorappadukirathu.

வடிவேலு எந்நேரமும் கைது செய்யப்படலாம்
2நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தை, திருவாரூர் தி.மு.க., கூட்டத்தில் தரக்குறைவாக பேசிய வடிவேலு மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சில பல மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்திற்கும், வடிவேலுவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஊர் அறிந்தது. இவர்கள் பிரச்சனையில் வடிவேலு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கொதித்து போன வடிவேலு, அப்போது நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் தேர்தலும் வந்துவிட்டது. விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்தார். முதல் பிரச்சாரத்தை கடந்த 23ம் தேதி திருவாரூரில் நடந்த முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் தொடங்கினார்.

அப்போது பேசிய வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதனால் விஜயகாந்தின் இமேஜ் பாதிக்கப்படுவதாக கூறி அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன் குமாரிடம் புகார் செய்தனர். இவர்களது புகாரை ஏற்ற பிரவீன் குமார், வடிவேலு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி நடிகர் வடிவேலு மீது, பொய்யானதைப் பேசி இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்தும் நோக்கம், அவதூறாக பேசுதல், தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நடிகர் வடிவேலு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.


மேலும் செய்திகள்

Tags : வடிவேலு, எந்நேரமும், கைது, செய்யப்படலாம், , வடிவேலு எந்நேரமும் கைது செய்யப்படலாம் , vadivaelu ennaeramum kaithu cheyyappadalaam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]