மொழித்தெரிவு :
தமிழ்
English


ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

jappaanel chunaami echcharikkai vaapas chunaami echcharikkai vidukkappaddathaal makkalidaiyae peethi aerpaddathu. pinnar chunaami echcharikkai vaapas perappaddathu. jappaanel kadantha 11m thaethi payankara pookampam aerpaddathu. ithu rikdar alavukoalil 9 pullikalaaka pathivaakiyathu.

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஜப்பானில் கடந்த 11ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளிகளாக பதிவாகியது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா, சென்டாய் போன்ற கடற்கரை நகரங்கள் நாசமாயின. இதில் சிக்கி 10 ஆயிரத்து 800 பேர் பலியாயினர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் நாசமடைந்தன. புகுஷிமா பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், அங்குள்ள அணு மின்நிலையத்தில் அணு மின் உலைகளின் Ôகூலிங் சிஸ்டம்ஸ்Õ செயல் இழந்து வெப்பம் அடையத் தொடங்கின. இதிலிருந்து வெளியான கதிர்வீச்சு, ஜப்பானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாயினர்.

அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள கடல்நீரில் கதிர்வீச்சின் அளவு வழக்கத்தை விட 1 கோடி மடங்கு அதிகரித்தது. இப்பிரச்னைகளை சமாளிக்க ஜப்பான் போராடிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இந்நிலையில் ஜப்பானின் கிழக்கு திசையில் உள்ள மியாகி பகுதியில் இன்று காலை பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியது. ஒசிகா தீபகற்பத்துக்கு கிழக்கே 80 கி.மீ. தூரத்தில், 6 கி.மீ ஆழத்தில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இது ஹான்சு கடற்கரை பகுதியில் 18 இன்ச் உயரத்துக்கு சுனாமியை ஏற்படுத்தலாம் என ஜப்பான் புவியியல் மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். அதன்பின் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.


மேலும் செய்திகள்

Tags : ஜப்பானில், சுனாமி, எச்சரிக்கை, வாபஸ், , ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் , jappaanel chunaami echcharikkai vaapas

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]