மொழித்தெரிவு :
தமிழ்
English


நெட்வேர்க் தொழில்நுட்பம்

nedvaerk tholilnudpam entha oru ariviyal kandupidippum, manetha chamookaththil thaakkam aerpaduththa, pala parinaama valarchchikalai adaivathu unmai.nedvaerk tholilnudpamaanathu

நெட்வேர்க் தொழில்நுட்பம்
எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும், மனித சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த, பல பரிணாம வளர்ச்சிகளை அடைவது உண்மை.நெட்வேர்க் தொழில்நுட்பமானது 1945ம் ஆண்டிலிருந்து இன்று வரை பல பரிமாண வளர்ச்சிகளைக் கண்டு, இக்காலத்தினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் ஏற்ற ஒரு கண்டுபிடிப்பாக திகழ்கின்றது

1945ம் ஆண்டில் வானிவர் புஷ் என்பவர் As we may think என்ற கட்டுரையை அட்லாண்டிக் மாத இதழில் வெளியிட்டார்.அத்தோடு கனிப்பொறி மயமாக்கப்பட்ட நூலகத்தைப் பற்றியும் எழுதினார். 1948ம்ஆண்டு நோர்பட் வியூனர் என்பவர் சைபரனடிக்ஸ் என்ற கொள்கையை கண்டறிந்தார்.

ஜனாதிபதி டிவிட் டீ எஸ். என்னோவர் ARPA (Advanced Research Project Agency) என்ற ஏஜென்சியை அமைத்தார்.1965 ஆம் ஆண்டு டெட் நெல்சன் என்பவர் லிடரரி மெசின்ஸ் என்ற கட்டுரையின் மூலம் வேர்ட் வேல்ட் வைட் வெப் உருவாக அடித்தளமிட்டார்.

மேலும் இதே ஆண்டில்தான் தோமஸ் மேரில் மற்றும் லாரன்ஸ் ஜீராபர்ட்ஸ் போன்றோர் மகாசுசேட்ஸில் உள்ள (TX � 2) கணனியை கலிபோர்னியாவில்உள்ள Q-32 என்ற கணினியோடு தொலைபேசி இணைப்பின் மூலம் இணைத்ததனாலேயே Wide Area Network � WAN உருவானது.மேலும் 1968 ஆம் ஆண்டில் டங்கிளாஸ் என்கின் பேர்ட் என்பவரே முதல் முதலில் ஹைபர் டெக்ஸ்ட் சிஸ்டத்தை உருவாக்கினார்.

1960ம்ஆண்டு Arpanet என்ற நெட்வேர்க் உதயமானது. பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவை தகவலைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது.1969ம் ஆண்டு நான்கு நொட் அல்லது ஹொஸ்ட் கணனிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு அர்ப்பாநெட் (dtcp/ IP) புரொட்டோகோலைப் பயன்படுத்த ஆரம்பித்தது. இது நாளுக்கு நாள் வளர்ந்து உலகமெல்லாம் பரவியது.

அத்தோடு நின்றுவிடாமல் 1970 ஆம் ஆண்டு நெட்வேர்கிங் குரூப்பினால் நெட்வேர்க் கொண்ட்ரோல் புரொட்டோகால் உருவாக்கப்பட்டது. இது அர்ப்பாநெட்டில் பயன்படுத்தப்படுகின்ற Host to Host புரொட்டோகோலைச் சார்ந்தது ஆகும். இதனைத் தொடர்ந்து 1972 இல் ஈமெயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
1978 ஆம் ஆண்டில் TCP ஆனது TCP / IP ஆக மாறியது. மேலும் வின்ட்செரீப், ஜான் போஸ்டல் மற்றும் டானிகோகென் போன்றோரால் இன்டர்நெட் புரொட்டோவில் உருவானது. செய்திகளை டேட்டா கிராம்களாக மாற்றி இந்த புரொட்டோ காலால் அனுப்புகின்றது.1975 இல் டெட்நெட் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் உருவான பக்கெட் கொமர்சியல் சுவீட்சிங் நெட்வேர்க்காக டெல்நெட் அமைந்துள்ளது. வேறுபட்ட நகர மக்களை இணைக்கின்ற தொழில்நுட்பமாக டெல்நெட் அமைந்துள்ளது.

யுனைட்டெட் ஸ்டேட்ஸ் நெஷனல் சயன்ஸ் பவுண்டேஷன் NSFNET - ஐ உருவாகின. இதுவே இன்டர்நெட்டின் உதயமாக இருந்தது. இது பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி கணனி மையங்களையும், பிட்ஸ்பர்க் மற்றும் பென்சில்வேனியா கணனி மையங்களையும் மற்றும் பல பல்கலைக்கழகங்களையும் இணைத்தது. 1990ம்ஆண்டில் NSFNET ஆனது SNET மற்றும் EVNET என்ற பிற நெட்வேர்க்களோடு இணைக்கப்பட்டது.

WORLD WIDE WEB ஆனது 1990 இல் உதயமானது. இதே ஆண்டில்தான் டிம் பெர்னர்ஸ்லி என்பவர் Hypet Text Markup Language ஐ உருவாக்கினார். HTML மற்றும் ஸிஞிழி மற்றும் சிஹிஹிஜி போன்றவை இன்டர்நெட்டை WORLD WIDE WEB ஆக மாற்றியது. தான் இன்டர்நெட் புரவ்சர் மற்றும் HTML டிம்பேனர்னாஸால் உருவாக்கப்பட்டது.


மேலும் பொதுக் கட்டுரைகள்

Tags : நெட்வேர்க், தொழில்நுட்பம், நெட்வேர்க் தொழில்நுட்பம், nedvaerk tholilnudpam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]