மொழித்தெரிவு :
தமிழ்
English


செல்போன் பயன்பாடு எலும்புகளை பாதிக்கும்

chelpoan payanpaadu elumpukalai paathikkum chelpoan payanpaduththuvathaal thodai elumpukal paathikkappadum ena amerikkaavil nadaiperra oar aayvil theriyavanthullathu.

செல்போன் பயன்பாடு எலும்புகளை பாதிக்கும்
செல்போன் பயன்படுத்துவதால் தொடை எலும்புகள் பாதிக்கப்படும் என அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்போனிலிருந்து மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. இது மனிதர்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, எலும்புகளை வலுவிழக்கச் செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது செல்போன் பயன்படுத்தும் ஆண்களின் வலதுபுற தொடை எலும்பின் மேல் பகுதியின் உறுதித் தன்மை குறைந்து காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரணம் பெரும்பாலானவர்கள் பெல்டின் வலது புறத்தில் செல்போன்களை வைத்திருப்பது தான்.

செல்போன் பயன்படுத்தாதவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை. எனினும், சிலர் செல்போன்களை இடது பேன்ட் பாக்கெட்டிலோ அல்லது பெல்டிலோ வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இடதுபுற தொடை எலும்பின் மேல் பகுதி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
மேலும் எவ்வளவு நேரம் செல்போன்களை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து பாதிப்பு விகிதம் மாறுபடும். இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Tags : செல்போன், பயன்பாடு, எலும்புகளை, பாதிக்கும், செல்போன் பயன்பாடு எலும்புகளை பாதிக்கும், chelpoan payanpaadu elumpukalai paathikkum

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]