மொழித்தெரிவு :
தமிழ்
English


சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!

chinaekaavai kankalanka vaiththa kalloori maanavarkal! panemalar kalloori vilaavukkuch chenra nadikai chinaekaa, akkalloori maanavarkal thanmeethu kaaddiya anpaik kandu nekilnthu kankalankinaar

சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!
பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். "என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை" என்றார் கண்ணீர் மல்க.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா. "நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்


மேலும் சினிமா

Tags : சினேகாவை, கண்கலங்க, வைத்த, கல்லூரி, மாணவர்கள், சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!, chinaekaavai kankalanka vaiththa kalloori maanavarkal!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]