மொழித்தெரிவு :
தமிழ்
English

ஒரு கோடிக்கு அதிகமாக கதிரியக்கம் என புரளி ஜப்பான் அரசு கண்டனம்.

oru koadikku athikamaaka kathiriyakkam ena purali jappaan arachu kandanam. jappaanen pukushemaa nakaril ulla anu minchaara urpaththi nelaiyaththin 2-vathu en anu ulaiyilirunthu kachintha kathiriyakka alavu oru koadi madanku enru chariyaakak kanakkidaamal ariviththu anaivaraiyum peethikku

ஒரு கோடிக்கு அதிகமாக கதிரியக்கம் என புரளி ஜப்பான் அரசு கண்டனம்.
5ஜப்பானின் புகுஷிமா நகரில் உள்ள அணு மின்சார உற்பத்தி நிலையத்தின் 2-வது எண் அணு உலையிலிருந்து கசிந்த கதிரியக்க அளவு ஒரு கோடி மடங்கு என்று சரியாகக் கணக்கிடாமல் அறிவித்து அனைவரையும் பீதிக்கு உள்ளாக்கலாமா என்று அதை நிர்வகிக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) என்ற நிறுவனத்தை ஜப்பானிய அரசு கண்டித்திருக்கிறது.

  ஜப்பானில் மார்ச் 11-ல் நேரிட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ஆழிப் பேரலை ஆகியவற்றுக்குப் பிறகு அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக சூடேறி வெடித்ததில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டு வருகிறது. அவற்றைக் குளிரவைக்க ஜப்பானிய அரசு தன்னாலியன்ற அனைத்தையும் செய்து வருகிறது. ஆனால் அதன் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அடுக்கடுக்காக தடைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

  இந்த நிலையில் கடல் நீரில் கரைந்த அணுக்கதிர்களால் ஏற்பட்ட கதிர்வீச்சை அளந்த தொழிலாளி ஒருவர் ஆலைப் பகுதியில் நிலவிய கடுமையான அணுக்கதிர்வீச்சு காரணமாக அவசர அவசரமாக ஒரு முறை மட்டுமே கதிர்வீச்சு அளவுமானியைப் பார்த்துவிட்டு ஒரு கோடி மடங்குக்கு கதிர் வீச்சு ஏற்பட்டிருப்பதாக அறிவித்தார்.

  இதனால் உலகம் எங்கும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டது. ஜப்பானில் இது மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச அணுவிசை ஏஜென்சியே செய்வதறியாது திகைத்தது.

  இந்த நிலையில் கதிர்வீச்சை மற்றொரு முறை அளவிட ஜப்பானிய அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போதுதான் ஒரு லட்சம் மடங்கு மட்டுமே கதிர் வீச்சு உயர்ந்திருப்பது தெரிந்தது. இதுவும் மனித குலத்துக்கு ஆபத்துதான் என்றாலும் ஒரு கோடி மடங்கு அளவுக்கு இல்லை.

  அத்துடன் பசிபிக் கடலோரத்தில் வாழும் நாடுகள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இந்தக் கதிர்வீச்சும் கடலில் கரைந்து நீர்த்துப் போகும் என்பதாலும் பாதிக்கப்பட்ட கடலோரத்தில் மீன் பிடிக்கும் வேலை சுமார் ஒரு மாதத்துக்கு தடைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாலும் மீன்கள், நத்தைகள் போன்றவற்றால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் சற்றே நிம்மதி ஏற்பட்டிருக்கிறது.

  பாதிக்கப்பட்ட அணு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கம்பிகள், கம்பிகளை மூழ்கவைக்கும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவற்றில் ஏற்படும் கதிர்வீச்சைக் குறைக்க அந்தத் தண்ணீரை அதற்காகவே உள்ள தொட்டிகளுக்கு பம்ப் செய்து அனுப்பும் பணியைத் தங்களுடைய உயிரையே பணயமாக வைத்து சுமார் 19 தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அவர்களில் 3 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  100 மில்லிசிவர்ட்ஸ் அளவுக்குக் கதிர் வீச்சு பாதிப்பு இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் இந்த 19 பேர் பணி செய்த இடம் 250-க்கும் மேல் இருக்கும். தங்களுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை, ஆயிரக்கணக்கான நம் நாட்டு ஜப்பானியர்களுக்கும் எதிர்கால சந்ததியான குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் இருக்க இந்தக் கதிர் வீச்சை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இவர்கள் இந்தப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

  அவர்களில் 3 பேர் கடந்த வியாழக்கிழமை 173 முதல் 180 மில்லி சிவர்ட்ஸ் வரை கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றனர். இருந்தும் மீண்டும் அந்த மூவரும் மற்றவர்களுடன் வேலைக்கு வந்துவிட்டனர்.

  இதற்கிடையே ஆழிப்பேரலை, நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த தங்களுடைய வீடுகளிலிருந்து சில பொருள்களை எடுக்க சிலர் முகாம்களிலிருந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கதிர்வீச்சு இருக்கிறது என்ற எச்சரிக்கையையும் அவர்கள் பொருள்படுத்தவில்லை என்பதால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். கதிர்வீச்சு அபாயம் குறையும்வரை வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


மேலும் செய்திகள்

Tags : ஒரு, கோடிக்கு, அதிகமாக, கதிரியக்கம், என, புரளி, ஜப்பான், அரசு, கண்டனம், ஒரு கோடிக்கு அதிகமாக கதிரியக்கம் என புரளி ஜப்பான் அரசு கண்டனம்., oru koadikku athikamaaka kathiriyakkam ena purali jappaan arachu kandanam.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]