மொழித்தெரிவு :
தமிழ்
English

கிரைண்டர் கல்லால் அடித்து மனைவி, மகள் படுகொலை

kiraindar kallaal adiththu manaivi, makal padukolai veeddil iruntha kiraindar kallai eduththu makal thalaiyil oanki adiththaar. raththam peeriddu, alari thudiththaar. aduththa vinaadiyae eesvariyin thalaiyilum adiththaar. iruvarum raththa vellaththil athae idaththil iranthanar.

கிரைண்டர் கல்லால் அடித்து மனைவி, மகள் படுகொலை
2 ஆலந்தூரை அடுத்த பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் ராதா (50). ஏர்போர்ட் கார்கோவில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இப்போது செக்யூரிட்டி வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஈஸ்வரி (47). மகள் திவ்யா (18), விமான நிலைய கேன்டீனில் வேலை பார்க்கிறார். மகன் ரவி (22). இவரது மனைவி சந்தியா.

ஈஸ்வரியின் நடத்தையில் ராதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ராதாவுக்கு இரவு பணி. வேலை முடிந்ததும், நேற்று காலை போதையில் வீட்டுக்கு வந்தார். மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஊரில் இருந்து வந்திருந்த ஈஸ்வரியின் தாய்மாமனுடனும் சண்டை போட்டுள்ளார். மாலையில் ராதா வெளியே சென்றுவிட்டார். வீட்டில் பிரச்னை என்பதால் சந்தியாவை வில்லிவாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் விட சென்றார் ரவி. ஈஸ்வரியின் தாய்மாமன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இரவில் ராதா வீட்டுக்கு வந்தார். ஈஸ்வரி, திவ்யா தூங்கிக் கொண்டிருந்தனர்.

ஆத்திரத்தில் இருந்த ராதா, வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மகள் தலையில் ஓங்கி அடித்தார். ரத்தம் பீறிட்டு, அலறி துடித்தார். அடுத்த வினாடியே ஈஸ்வரியின் தலையிலும் அடித்தார். இருவரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

உடனே அங்கிருந்து ராதா ஓடிவிட்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், பழவந்தாங்கல் உதவி கமிஷனர் மனோகர சுந்தரதாஸ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணபிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழவந்தாங்கல் ரத்தினாபுரம் பகுதியில் ராதாவை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Tags : கிரைண்டர், கல்லால், அடித்து, மனைவி,, மகள், படுகொலை, கிரைண்டர் கல்லால் அடித்து மனைவி, மகள் படுகொலை, kiraindar kallaal adiththu manaivi, makal padukolai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]