மொழித்தெரிவு :
தமிழ்
English

சரும பராமரிப்பிற்கு

charuma paraamarippirku chilarukku mukaththil paru illaamal chuththamaaka irukkum irunthaalum aetho mukaththil dallaaka theriyum. avanka athikamaaka thanneer kudikkanum. appoaluthu thaan charumam puththunarchchi perru eerapachaiyudan irukkum.. kurainthathu

சரும பராமரிப்பிற்கு
16

சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடலை அழகாக்க பிடிக்காது அவர்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்.

உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வகையான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசளைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து உண்டு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களில் கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள்:

அதிக வறண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

தக்காளி:

ஆண்டி ஆகிஸிடெண்ட்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும்.

இளமையில் முதுமை:

இளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

மீன்:

மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும செல்களை புதுப்பிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.

முகப்பருக்களை தடுக்க:

சோயாபீன்ஸ் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும்.

கேரட்:

இதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.

டல் லடிக்கும் முகம்:

சிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கணும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.


மேலும் அழகு குறிப்பு

Tags : சரும, பராமரிப்பிற்கு, சரும பராமரிப்பிற்கு, charuma paraamarippirku

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]