மொழித்தெரிவு :
தமிழ்
English

நட்டு விடுங்கள்

naddu vidunkal koduththae palakiya enakku; kaedka vedkamaay thaan irukkirathu;

நட்டு விடுங்கள்
UP Date
5

என்னைச் சாய்த்துவிட்டு
நீ சாய்ந்து கொள்ளச் சாய்மானம்
வெட்டிவிட்டு நல்லவிலைக்கு விற்றுவிட்டுப்
பெற்றுக்கொள்வாய் வெகுமானம்!

காவலுக்கு நான் உன் வீட்டுக் கதவாக;
இமை தட்டும் உறக்கத்திற்கு
உன்னைத் தாலாட்டும் கட்டிலாக!

உன் குழந்தைகள் கட்டிப்பிடித்து
விளையாட நண்பனாய்;
முத்தமிடும் வியர்வையை முதுகில்
தட்டிவிட்டு வழியனுப்பும் நிழலாய்!

ஓட்டைவிழும் ஓசோனுக்கு
மாற்று மருந்தாய்;
கூடு கட்டிக் குடி வாழும்
குருவிகளுக்கு வீடாய்!

கொடுத்தே பழகிய எனக்கு;
கேட்க வெட்கமாய் தான் இருக்கிறது;
வெட்டுங்கள் வெட்டுவதற்கு முன்னே
ஒரு செடியாவது நட்டு விடுங்கள்!


மேலும் ஏனையவை

Tags : நட்டு, விடுங்கள், நட்டு விடுங்கள், naddu vidunkal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]