மொழித்தெரிவு :
தமிழ்
English

வெற்றியெனும் மாளிகைக்கு.....

verriyenum maalikaikku..... kashdankal, pirachnaikal, kurai paadukal, asowkariyankal ivaikalai chakiththuk kondu thaakkuppidikkum poarumai. Patience.

வெற்றியெனும் மாளிகைக்கு.....
UP Date
4ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?
நான்கு.

வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி…. ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது. அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை.

முதல் தேவை : பொறுமை

கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.

இரண்டாம் தேவை : சக்தி

பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே. பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்? அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான். ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)

மூன்றாம் தேவை : திட்டம்

வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan

நான்காம் தேவை : விடாமுயற்சி

திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி, Preseverance.

இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன். ஆக 4Ps என்று சொல்லப்படும், PATIENCE
POWER
PLAN
PERSEVERANCE
என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.


மேலும் சிந்தனைத்துளி

Tags : வெற்றியெனும், மாளிகைக்கு, வெற்றியெனும் மாளிகைக்கு....., verriyenum maalikaikku.....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]