மொழித்தெரிவு :
தமிழ்
English

தமிழ் , கருணையின் மொழி, அன்பின் மொழி

thamil , karunaiyin moali, anpin moali unkal ethirae varum thamilk kulanthaiyidam peyaraik kaedduppaarunkal , thamilan vekuthooram vanthuviddaan...!! ulakilaeyae poarraththakkathum perumaikkuriyathum nam thamilkkalaachaaram thaan.

தமிழ் , கருணையின் மொழி, அன்பின் மொழி
3ஒருமனிதனின் முதல் அடையாளம் , அவன் சார்ந்த சமூகம். நாம் தமிழர்கள். நமக்கான அடையாளங்கள் நம்மிடம் என்ன மீதமிருக்கின்றன ?

பெயர்..?

உடை..?

மொழி..?

பொது இடங்களில் நம்மவர்களைப் பார்க்கையில் மிகவும் வேதனையாயிருக்கிறது. மறந்தும் தமிழ் பேசுவதில்லை. அண்டை மாநில நண்பர் ஒருவர் சொன்னார் , "இரண்டு இந்தியர்கள் சந்திக்கும்போது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டால் அவர்கள் நிச்சயம் தமிழர்களாகத்தான் இருக்கும்" என்று , அவர் நகைப்புக்காக சொன்னாலும் என் மனதைக் குத்திக் கிழித்தது உண்மை.

ஜப்பானியர்கள் அவர்களது மொழியைக் கவிதை மொழி என்கின்றனர், ஃபிரெஞ்சுக் காரர்கள் தனது மொழியை புரட்சியின் மொழி என்கின்றனர் , உலகின் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியை பல்வேறு பெயர்களில் சிறப்புப்படுத்தினாலும் தமிழ் மட்டுமே கருணையின் மொழி, அன்பின் மொழி என்ற சிறப்புகளைப் பெற்றுள்ளது. தமிழைத் தாய்மொழி என்றழைக்கும் பேறு பெற்றிருக்கும் தமிழர்கள் தான் மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளவில்லை. தாயைப் போற்றாதவன் தெய்வத்தையே நேரில் பார்த்தாலும் பலனொன்றும் இல்லை. தமிழைப் போற்றாத தமிழன் தரணியெங்கும் சுற்றி வந்தாலும் அடையாளமில்லாத அனாதையே !

உங்கள் எதிரே வரும் தமிழ்க் குழந்தையிடம் பெயரைக் கேட்டுப்பாருங்கள் , தமிழன் வெகுதூரம் வந்துவிட்டான்...!!

உலகிலேயே போற்றத்தக்கதும் பெருமைக்குரியதும் நம் தமிழ்க்கலாசாரம் தான். என்னதான் உணவு, உடை , வசிக்கும் இடம் என மாற்றங்கள் வந்தாலும் நம் பண்பாடு பறிபோவதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதைத் தக்க வைத்துக்கொள்ள நாம் தமிழர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள் .

நட்புடன் : ..யாழினி..


மேலும் கருத்துக்களம்

Tags : , தமிழ், ,, கருணையின், மொழி,, அன்பின், மொழி, , தமிழ் , கருணையின் மொழி, அன்பின் மொழி , thamil , karunaiyin moali, anpin moali

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]