மொழித்தெரிவு :
தமிழ்
English


மனம்

manam intha ulakin thooymai alinthu kondae poakirathu. poaymaiyum, poayyaana, poaliyaana vaedamum, eduththu vaikkira ovvooru adiyilum, manethan kalankappadavae cheykiraan. mananemmathiyai, amaithiyai ilanthu allalpaduvatharkuk kaaranam aachai, paeraachai. ithanelirunthu vidupaddaaka vaendum.

மனம்

அலைந்து அலைந்து களைத்துக் கிடக்கிறது மனித மனம். எதற்காக என்றே தெரியாத, காட்டு நாய்த்தனம்...! வன்மம், கோபம், ஏமாற்றம், விரக்தி, ஆசை, கவலை, இன்பம், சோகம், மகிழ்ச்சி என்றெல்லாம் மாறி மாறி மோதிய அலையில், மனதின் ஓரங்களில் கப்பிக் கிடக்கிறது உப்புப்பாளங்கள். அடித்தவனை கடிக்கப் பார்க்கும் ஆவேசம் - அறியாமல், காலை மிதித்தவனை நசுக்கி வைக்கும் மிருகரோஷம் மண்டிக் கிடக்கிறது.

இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறான் மனிதன் ?

விடுபடுவதையோ, விரயப்படுவதையோ உணராத உன்மத்த மனம்... 'சுய அறிதல்' இன்றி, மனம் இன்றி கரைந்து கொண்டிருத்தலைத் தடுத்துக் கரை சேர வழி காணவே இருப்பது பிறவிப்பயன்.....!

இந்த உலகின் தூய்மை அழிந்து கொண்டே போகிறது. பொய்மையும், பொய்யான, போலியான வேடமும், எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும், மனிதன் களங்கப்படவே செய்கிறான். மனநிம்மதியை, அமைதியை இழந்து அல்லல்படுவதற்குக் காரணம் ஆசை, பேராசை. இதனிலிருந்து விடுபட்டாக வேண்டும். அவனை விடுவிக்கும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் இல்லாத நிலையில் 'தியானம்' ஒன்றே ஆற்றல்மிக்கதாக விளங்குகிறது. அழிகின்ற உடல், அழிவற்ற 'ஆன்மா''

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஓர் ஆன்மா. இதனை உணர்வதின் மூலமே, அவன் இருளிருந்து மீள முடியும். இதன் மூலமே அவன் தன்னை உணர முடியும். அன்பு அழிந்து, சகோதரத்துவம் ஒழிந்து, மனிதநேயம் குறைந்து, மனிதனையே, மனிதன் நம்ப முடியாத நிலையில் மனிதனை மனிதன் கொல்வதில்- வக்கர சுகம் காண்பதில் வளர்ந்து கொண்டிருக்கிறான்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

ஐம்புலன்களும் கட்டவிழ்ந்து அலைகிறது. அதற்கு அடிமையாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்கிக் கிடக்கிறான். பேராசையின் விளைவால், தனது ஒவ்வொரு குற்றத்தையும் நியாயப்படுத்துகிறான். இதிலிருந்து விடுபட, தீய செயல்- தீய எண்ணங்களில் இருந்து 'விடுதலை' பெற வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.

இதனை அடைய பொருள் சார்ந்த இந்த உலக நிலை உதவாது. தியானமே அதனைக் கைகொள்ள, மேற்கொள்ள மிகச்சிறந்த வழியாகும். சக்தி முழுவதும் ஒன்று திரட்ட வேண்டும். மனிதனுள் வாழும் தீமையை ஒழித்தால் துன்பம் தொலையும். துன்பங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்று அறிதல் வேண்டும்.

'நான் யார்? ' என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறது, சமயத் தத்துவம். நான் யார் என்று ஆராய்ந்து மனிதன், துன்பங்களை வெல்லும் போராட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.'நான்' என்பது கண்முன் தெரியும், புறத்தோற்றத்தால் அல்ல. ஆடை அணிந்து பகட்டாய், பார்வைக்கு இரம்மியமாய் காணும் புறநிலை அல்ல. அதற்கும் அப்பால் ஊடுருவிப் பார்த்தால், ஐம்புலன்களின் அவலத்திற்கு கட்டுப்படாமல், தலைவிரித்து ஆடாமல் பதவி, அந்தஸ்து பொருள் சார்ந்த வாழ்வு என்கிற தீயவைகளை வென்று நிற்கும் நிலையே 'நான்'.

அந்த 'நான்' ஒரு பிரகாசமான தெய்வீக ஒளி, அந்த ஒளி நிலையிலிருந்து வல்லமை மிக்க பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதே, மனிதனின் இருளை நீக்கும். தன்னைப் பற்றிய உண்மை நிலையினை உணர வைக்கும். ஒவ்வொருவரும் ஓர் ' ஆன்மா ' என்ற உணர்வினை ஓங்கச் செய்தல் வேண்டும். அத்தகையதொரு மனவளத்தை அடைய வேண்டுமானால், சலசலப்புமிக்க இந்த சமுதாயப் புற ஆவேசங்களிலிருந்து மனதை ஒதுக்கி வைக்க ஒரே வழி தியானம்தான்.


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : மனம், மனம், manam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]