மொழித்தெரிவு :
தமிழ்
English

இப்படியெல்லாம் யோசிச்சாதான் நல்லதாம்...

ippadiyellaam yoachichchaathaan nallathaam... enna chaar ithu... naduroddulae nennukiddu aakaayaththaip paarththukkiddirukkeenka? nennukidda yoachanai cheyyarathuthaan nallathunnu cholraanka...

இப்படியெல்லாம் யோசிச்சாதான் நல்லதாம்...
13

“என்ன சார் இது... நடுரோட்டுலே நின்னுகிட்டு ஆகாயத்தைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?”


“நின்னுகிட்ட யோசனை செய்யறதுதான் நல்லதுன்னு சொல்றாங்க...!”

“கலிபோர்னியா பல்கலைக்கழகத்துலே உள்ள ஓர் ஆராய்ச்சியாளர் (Masx Vercryssen) அப்படி சொல்றார்..!”


“எப்படி..?”


“உட்கார்ந்து கொண்டு ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்கிறதைவிட நின்று கொண்டும், நடந்துக்கொண்டும், யோசித்தால் சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரமுடியும்ங்கறார்.. அவர்!”

”அவர் சோதனையெல்லாம் செய்து பார்த்துட்டு தான் அதைச் சொல்லியிருப்பார்..!”


“ஆமாம்..! குறிப்பா... கடுமையான சூழ்நிலையிலே மன இருக்கத்துடன் வேலை செய்கிறவர்கள் நின்று கொண்டு யோசித்தால் 5 முதல் 20 சதவீதம் சீக்கிரமா முடிவு எடுத்துடறாங்களாம்..!”


“ஆகக் கூடி... நாற்காலியிலே உட்கார்ந்துகிட்டு யோசிக்கிறதைவிட நடந்துகிட்டு யோசிக்கிறது நல்லதுங்கறீங்க..?”


“ஆமாம்..!”


“அதுக்காக இப்படி நடுரோட்டுலே நாலுபக்கமும் பஸ் லாரியெல்லாம் படுவேகத்துலே வந்துகிட்டிருக்கிற இந்த இடத்துலே நின்னுக்கிட்டா நீங்க யோசிக்கணும்..?”


“ஹி.. ஹி்... ! என்ன பண்றது? அவசரத்துலே வேறே இடம் கிடைக்கலே...!”


“சரி.. அப்படி என்னதான் யோசிக்கிறீங்க..?”


“பெரிய ஆஸ்பத்திரிக்கு உடனே போகணும். அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்..!”


“வேற ஒண்ணும் பண்ண வேணாம். இதே இடத்தில இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னுகிட்டிருங்க. யாராவது கொண்டுக்கிட்டுப் போய் சேர்த்துடுவாங்க...!” (நன்றி வாரம் ஒரு தகவல்)


எது எப்படியோ சரியான சிந்தனையுடன் சரியான கண்ணோட்டத்துடன் யோசிக்கும்போது ஒரு விஷயத்திற்கும் சரியான முடிவுகிட்டும். அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதான இருக்காது. பொருமையுடன் யோசிக்கும்போது மட்டுமே நல்ல தீர்வுகள் நமக்கு கிடைக்கின்றன.


அவசரத்தில் சில முடிவுகள் எடுத்துவிட்டு பின்பு வருந்துவதை விடுத்து முடிவுகள் எடுக்கும் ‌போதே பொறுமையை கடைபிடித்தால் அந்த விஷயம் வெற்றியை சந்திக்கும்.


மேலும் சிந்தனைத்துளி

Tags : இப்படியெல்லாம், யோசிச்சாதான், நல்லதாம், இப்படியெல்லாம் யோசிச்சாதான் நல்லதாம்..., ippadiyellaam yoachichchaathaan nallathaam...

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]