மொழித்தெரிவு :
தமிழ்
English

கறிவேப்பிலை சாதம்

karivaeppilai chaatham arichiyai uthiriyaaka vaekavaikkavum. karivaeppilaiyai verum kadaayil varukkavum.

கறிவேப்பிலை சாதம்
19

தேவையானவை

பச்சரிசி - 1 கப்

உப்பு - தேவைகேற்ப

வறுத்து பொடிக்க

கறிவேப்பிலை - 1/4 கப்

எண்ணெய் - 1 தே.க

உளுத்தம் பருப்பு - 1 தே.க

வரமிளகாய் - 2

மிளகு - 1/2 தே.க

சீரகம் - 1/2 தே.க

பெருங்காய தூள் - 1/2 தே.க

தாளிக்க

எண்ணெய் - 1/2 தே.க

முந்திரி பருப்பு - 4

உளுத்தம்பருப்பு - 1/2 தே.க

செய்முறை

அரிசியை உதிரியாக வேகவைக்கவும்.

கறிவேப்பிலையை வெறும் கடாயில் வறுக்கவும்.

வறுத்து பொடிக்க உள்ளதை எண்ணெய் சேர்த்து வறுக்கவும். நன்றாக ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

சாத்தில் இந்த பொடியை சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

தாளிக்கயுள்ளதை தாளித்து சாதத்தில் கலந்து கொஞ்சம் நெய் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு:

இதில் மசாலாவில் வேண்டுமென்றால் பட்டை, கராம்பு சேர்த்தும் செய்யலாம்.


மேலும் சமையல் கலை

Tags : கறிவேப்பிலை, சாதம், , கறிவேப்பிலை சாதம் , karivaeppilai chaatham

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]