மொழித்தெரிவு :
தமிழ்
English

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம்?

eppadi chonnaal Kadhalil jaeyikkalaam? Kadhal enpathu poo malarvathu poala. entha nodiyilum nekalalaam. athai eppadi velippaduththuvathu enpathilthaan verri kidaikkirathu. cholla nenaiththum vaarththaikal varaamal thadumaaruvathu iyarkai. aanaal chollaatha Kadhal choakakKadhal aakividum.

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம்?
13

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :

மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்

எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்

காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை ‘வளவள’வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களுடன் சொல்லுங்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, ‘அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : எப்படி, சொன்னால், காதலில், ஜெயிக்கலாம், எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம்?, eppadi chonnaal Kadhalil jaeyikkalaam?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]