மொழித்தெரிவு :
தமிழ்
English


உங்கள் கூந்தல் எந்த வகை? கண்டுபிடித்து விட்டீர்களா?

unkal koonthal entha vakai? kandupidiththu viddeerkalaa? penkalukku adarththiyaana, karumaiyaana
உங்கள் கூந்தல் எந்த வகை? கண்டுபிடித்து விட்டீர்களா?

பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான, நீளமான முடி இருந்தால் அதுவே அற்புதம். அழகு. பெண்களில் அநேகருக்கு அற்புதமான முடி நீண்டு, கருமையாக கண்ணைப் பறிக்கும். ஆனால் பெண்கள் முடிகளிலேயே நான்கு விதங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அந்த நான்கு வகையான முடிகளை பராமரிக்க சில எளிமையான வழிமுறைகள் இங்கே..........

1. பஞ்சு போன்று மென்மையான சில்கி முடி இருப்பவர்கள்....... எண்ணெய் தடவினால் அவர்களின் கூந்தல் மேலும் மெலிந்து ஒல்லியாகக் காட்டும். முடி அடர்த்தியாகத் தெரிய, இவர்கள் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது பெஸ்ட். வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயால் தலையை நன்றாக மசாஜ் செய்து, சிறிது கடலை மாவுடன் எலுமிச்சைச் சாறு, வெட்டிவேர் தண்ணீரைக் கலந்து தலையை அலசினால்…முடி புஷ்டியாக தெரிவதுடன் பளபளவென மின்னும்.

2. நீண்ட முடி இருப்பவர்களுக்கு........... அடிக்கடி சிக்கு ஏற்படும். எனவே, இவர்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் கூந்தலை சீராகச் சீவி, பின்னல் போட்டுக் கொள்வது சிறந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவலாம். வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெயை தடவி வாரி, கற்றாழை ஜெல், வெந்தயக்கீரைச் சாறு இவற்றுடன் சீயக்காயை கலந்து தலைக்கு குளித்து வந்தால் கேசத்தின் இயற்கை தன்மை மாறாமல், பளபளப்புடன் கருகருவென்று வளரும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

3. அடர்த்தியுடன், சுருள் முடி இருப்பவர்கள்….முடியை இரண்டாகப் பிரித்து, பத்து நிமிடமாவது படிய வார வேண்டும். இவர்கள் தலைக்கு எவ்வளவு தான் எண்ணெய் வைத்தாலும், எண்ணெய் இல்லாதது போல் வறட்சியாகத் தெரியும். எனவே, தினமும் கேசத்துக்கு எண்ணெய் வைக்க வேண்டும். வாரம் இருமுறை வெந்தயத்தூள், புங்கங்காய்த்தூள், பயத்தம்பருப்பு மாவு தலா 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து தலைக்கு குளித்து வந்தால்…முடி மிருதுவாவதுடன், நுனி வெடிப்பும் இருக்காது.

4.அதீத சுருள் முடி இருப்பவர்கள்....... முடி ஸ்ட்ரெய்ட்டா இல்லையே என்று பீல் பண்ணுவது இயல்பு. அதற்காக பார்லரில் ‘ஸ்ட்ரெயிட்னிங்’ செய்து கொள்வதைவிட, இரவு தோறும் தலையில் தேங்காய் எண்ணெயை தேய்த்து, பதினைந்து நிமிடம் படிய வாரலாம். காதோரப் பகுதியில் ஹேர் பின்களை குத்தி, இறுதியில் கிளிப் போட்டுக் கொள்ளலாம். மறுநாள், முடி நீளமாகத் தெரியும். இதைத் தொடர்ந்து செய்வதால், சுருட்டிக் கொண்ட முடியும் சோம்பல் முறிக்கும்!


மேலும் அழகு குறிப்பு

Tags : உங்கள், கூந்தல், எந்த, வகை, கண்டுபிடித்து, விட்டீர்களா, உங்கள் கூந்தல் எந்த வகை? கண்டுபிடித்து விட்டீர்களா?, unkal koonthal entha vakai? kandupidiththu viddeerkalaa?


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text