மொழித்தெரிவு :
தமிழ்
English


மஞ்சள்

majchal penkalin thol pakuthi mikavum menmaiyaanathu

மஞ்சள்

1. பெண்களின் தோல் பகுதி மிகவும் மென்மையானது. அதனால் கிருமி தொற்றுதலுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு. அதனால் தான், பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்கச் சொல்கிறோம்.

2. சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி, மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் விஷத்தன்மை ஏற்படாது.

3. பாதாம் பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும்.
மூலம், பவுத்திரத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ் பூன் வெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடியையும் கலந்து, அந்த கலவையை உள் மூலத்திற்கும், வெளிமூலத்திற்கும் தடவி வந்தால் நாளடைவில் நல்ல குணம் கிடைக்கும்.

4. குளிக்கும் தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் பொடியையும் சேர்த்து கலக்கி, அதை சூரிய ஒளியில் வைத்து, சிறிதுநேரம் கழித்து குளிப்பது நல்லது. சூரியஒளி சக்தியினால் மஞ்சள் மேலும் வீரிய சக்தி பெற்று நோயை தடுக்கும் மருந்துபோல் செயல்படுகிறது. அம்மை நோய்க்கு மட்டுமல்ல; சாதாரண நாட்களிலும் ஆண்-பெண் இருபாலரும் இப்படி மஞ்சள் தண்ணீரில் குளிக்கலாம்.

5. மஞ்சளையும், சந்தனத்தையும் கலந்து நெற்றியில் திலகமிட்டால் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகிவிடும். மூளை, நரம்பு மண்டலம் அப்போது குளிர்ச்சி அடைவதே இதற்கு காரணம்.

6. மஞ்சள் பொடியை உடலில் பூசி குளிப்பதால் கவர்ச்சியான நிறத்தை பெறலாம். அதாவது தோல் பளபளப்பாகும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

7. தொற்றுநோய் உள்ள பகுதியில் மஞ்சள் நீரையோ, மஞ்சள் பொடியையோ தெளித்து வந்தால், அந்த நோய் மற்ற பகுதிகளுக்கு பரவாது. வந்த பகுதியிலும் அதை கட்டுப்படுத்தலாம். வீட்டு வாசலில் மஞ்சள் கொத்தை கட்ட காரணமும் இதுதான்.

8. ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த, மஞ்சள் நீரில் துளசி இலைகளை தேவையான அளவு சேர்த்து கலந்து, ஈ உள்ள பகுதிகளில் தெளித்து வந்தாலே போதும். ஈக்கள் தொல்லை குறைந்து விடும்.

9. தொடர்ச்சியான இருமல் உள்ளவர்கள் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து தினமும் 3 வேளை வீதம் பருகி வந்தால் இருமல் காணாமலேயே போய்விடும்.

10. சுட்ட அல்லது வறுத்த மஞ்சள் பொடியை பாலில் சிறிதளவு கலந்து சில நாட்கள் தொடர்ச்சியாக பருகி வந்தால் மேக நோய் குணமாகும்.


மேலும் மருத்துவ குறிப்புகள்

Tags : மஞ்சள், மஞ்சள், majchal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]