மொழித்தெரிவு :
தமிழ்
English


உடற்பயிற்சி உபகரணங்கள்

udarpayirchi upakaranankal udarpayirchik koodankalukkuch chellumun

உடற்பயிற்சி உபகரணங்கள்

உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லுமுன் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்துவிட்டுச் செல்லவும். தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது நல்லது.

அப்டமன் பென்ச் (Abdomen bench): சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால்புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்துக் கொண்டே தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக்கொண்டே முழங்கால்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக அதிகரித்து முடிவில் 100 தடவைகளாவது செய்ய வேண்டும். இதனால் வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இளமையாகத் தோன்றலாம்.

டுவிஸ்டர் : உட்கார்ந்தும் நின்றும், இடுப்பை வளைத்தும், குறைந்தது 50 முதல் 500 தடவை வரை பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்தால் இடுப்பு மடிப்பு நீங்கும்; இடுப்புக்கு நல்ல வடிவமும் கிடைக்கும்.

ரோயிங் : இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் பெடலில் வைத்துக் கொண்டு, பக்கவாட்டில் இருக்கும் இரு ஹேண்டில்களை கைகளால் பிடித்துக் கொண்டு இருக்கையை நகர்த்தியபடியே முன்னும் பின்னும் கைகளால் துடுப்புத் தள்ளுவது போன்று, 25 முதல் 200 தடவை செய்ய வேண்டும். பெண்கள் குறைவாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடைகள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் அமைகிறது.

சைக்கிள் : உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிளில், ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, 5 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை பயிற்சி செய்யலாம். இது கால்களுக்குத் தனி அழகைத் கொடுக்கும். இதில் இருக்கும் மீட்டர் மூலம், ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பயிற்சி செய்கிறோம் என்று குறித்துக் கொள்ளலாம்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

வைப்ரேட்டர் : மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த மெஷினின் பெல்ட்டை அதிகப்படியான சதைகள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நிமிடம் வீதம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கர்ப்பப்பை தொந்தரவு இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டாம். இது, உடல் உறுப்புகளுக்கு மசாஜ் செய்வதுபோல் இருக்கும்.

வாக்கர் (Walker) : இது நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்வது போன்று, ரோல்களால் இயக்கப்படும் ஓர் இயந்திரம். இதில் 10 நிமிடம் ஓடுவது, வெளியில் 5 கிலோமீட்டர் ஓடுவதற்கு ஒப்பாகும். இதன் மூலம் உடல் முழுவதுமுள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

ஸ்டெப்பர் : இருபுறமும் கால் வைக்க இரு பெடல்கள் இருக்கும். கைகளை ஹேண்டில் பாரில் பிடித்துக் கொண்டு, கால்களால் பெடல் செய்யும்போது கால்களில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைக்கப்பட்டு, கைகளும், தோள்களும் பலம் பெறுகின்றன.


மேலும் உடல்நலம்

Tags : உடற்பயிற்சி, உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், udarpayirchi upakaranankal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]