மொழித்தெரிவு :
தமிழ்
English

சிந்திக்க சில பேஸ்புக் ஸ்டேட்டஸ்............

chinthikka chila paespuk sdaeddas............ ariya virumpinaal nanmaikalaiyum, theemaikalaiyum arinthu kollunkal.... nanmaiyai anaiththu kollunkal... theemaiyai anaiththu vidunkal

சிந்திக்க சில பேஸ்புக் ஸ்டேட்டஸ்............
60

நீ வாழ்க்கையில் போராட தயங்குகிறாய்....

ஆனால்....

ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது.

இந்த உலக வாழ்க்கை நிலையற்றது, நிரந்தரமற்றது

என்பதை அறிந்து விட்டால்,

ஆசை, சுயநலம் போன்ற தீயவை அனைத்தும்

நம்மை விட்டு விலகி விடும்.

தீயவை அனைத்தும் நீங்கினால்,

பாவங்கள் நம்மை விட்டு மறைந்து போய்விடும்...

மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே..

மாற்ற முடிந்ததை மாற்றாமல் விடாதே..!

மாற்றக்கூடியது எது..????

மாற்ற முடியாதது எது...???

என்பதில் விவேகம் காட்டு...

மற்றவர்கள் நம்மை பார்த்து

பரிதாபப்படும் நிலையில் இருப்பதை விட,

மற்றவர்கள் நம்மை பார்த்து

பொறாமைப்படும் நிலையில் இருப்பது சிறந்தது.

ஒருவருக்கு அசைக்க முடியாத

தன்னம்பிக்கை மட்டும் இருந்தது என்றால்....

அவரால் எல்லா வித துன்பங்களையும், துயரங்களையும்

தாங்கி நிற்க முடியும்..

நீ வேண்டுமானால் சும்மா இருக்கலாம்.....

ஆனால், காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை.

உன் ஆயுளில் ஒரு நாளை குறைத்து விட்டுத்தான் செல்கிறது.

பயம் உள்ளவர்களாலும்,

எல்லாவற்றிற்கும் அஞ்சுபவர்களாலும்

எதையும் சாதிக்க இயலாது.

வாழ்க்கையில் ஜெயிக்க, நண்பர்களும் வேண்டும்...

வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க, எதிரிகளும் வேண்டும்

ஓவியனின் பெருமை

அவன் தீட்டும் வண்ணத்தில்...

மனிதனின் பெருமை

அவன் கொண்டுள்ள எண்ணத்தில்.

எந்த ஒரு தனி மனிதரையும், அவருடைய

சிறப்புகளையும், திறமைகளையும் சொல்லி பாராட்டும் போது

அந்த நபர் பெருமை கொள்கிறார்.. மகிழ்ச்சி அடைகிறார்...

அதே அவரின் குறைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டும் போது

வருத்தம் கொள்கிறார் அல்லது கோபம் கொள்கிறார்...

அதே போலத்தான் மதங்களும்.... முடிந்தவரை

அதிலுள்ள நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை பற்றி

"தர்க்கம்" செய்வதை தவிர்த்து கொள்வோம்...

மனிதராக வாழ்வோம்... மனித நேயம் காப்போம்.

முடியும்" என்று நம்பி துவங்கு....

செய்யச் செய்ய மனம் உறுதிப்படும்.....

"தளர்வு" தள்ளி போகும், "வேகம்" கூடும், "வெற்றி" தெரியும்..

அறிய விரும்பினால்

நன்மைகளையும், தீமைகளையும்

அறிந்து கொள்ளுங்கள்....

நன்மையை அணைத்து கொள்ளுங்கள்...

தீமையை அணைத்து விடுங்கள்

பின் விளைவுகளை பற்றி சிந்தித்துப் பார்க்காமல் பேசுவது,

குறி பார்க்காமல் சுடுவதற்கு ஒப்பாகும்..

வெற்றிகரமான வாழ்க்கைக்கு, எப்போதும் ஒரு சவால்

இருந்து கொண்டே இருக்க வேண்டும்

நமது கண் தான்.... சில சமயங்களில்

நம்மிடமே உண்மையை மாற்றி காண்பிக்கின்றது..

சிக்கான தேவை இருக்கும் வரை,

தேடலுக்கான போராட்டமும் இருக்க வேண்டும்.

உதிரும் இலைகளும் உரமாகிறது,

உதயமாகும் மற்றுமொரு தாவரத்திற்கு...

அது போல இருக்க வேண்டும் நமது இறப்பும்..

அனைவருக்கும்

புன்னகையும், சிரிப்பும், அழுகையும்

ஒரே மொழி......

விதைப்பதை தள்ளி வைப்பவன்,

விளைச்சலை தள்ளி வைக்கிறான்.

வேலைகளை தள்ளி வைப்பவன்,

வெற்றிகளை தள்ளி வைக்கிறான்

முள்ளோடு வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை.

அதுபோல் அன்போடு வளரும் நட்பை யாரும் துறப்பதில்லை

நயவஞ்சமாக பிறரை கீழே தள்ளி விட்டு

எப்பொழுது நீ வெற்றி பெற நினைக்கின்றாயோ...

அப்பொழுதே நீ தோற்று விடுகின்றாய்.

வாழ்க்கையில் யாரும் தோற்று விட்டதாக

ஒருபோதும் எண்ண வேண்டாம்.

தோல்வியாக நமக்கு தோன்றுவதில்

இறைவன் ஒரு நன்மையை மறைத்து வைத்திருக்கலாம்.

எந்தவொரு தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாக கருதவேண்டும்.

எல்லோருக்கும் சமமான சந்தர்ப்பங்களே கிடைக்கின்றன.

ஆனால்......

ஒவ்வொருவரின் திறமை, முயற்சி, இறைவனின் நாட்டம்

என்பவற்றிலேயே வெற்றிகள் தங்கியுள்ளன..

பணம் இல்லாத காலியான பாக்கெட், வாழ்க்கையில்

உனக்கு பலகோடி விஷயங்களை கற்றுத் தரும்....

ஆனால்..

பணம் நிறைந்த உனது செழிப்பான பாக்கெட்

உன்னை பல்வேறு வழிகளில் சீரழித்து விடும்

பணத்தை ஆதாரமாக வைத்து வரும் நட்பு நிரந்தரமாய் இருப்பதில்லை.

அன்பு, பாசத்தை ஆதாரமாக வைத்து வரும் நட்பு அழிவதில்லை

பலரிடம் சுட்டது.....


மேலும் சிந்தனைத்துளி

Tags : சிந்திக்க, சில, பேஸ்புக், ஸ்டேட்டஸ், சிந்திக்க சில பேஸ்புக் ஸ்டேட்டஸ்............, chinthikka chila paespuk sdaeddas............

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]