மொழித்தெரிவு :
தமிழ்
English

காதலின் இலக்கணம்

Kadhalin ilakkanam Kadhal inru kaliyaaddankalaiyum ili nookkankalaiyum kondu naachamadainthu varukirathu athai kaevalappaduththukira iliyarkal innum athai thodarnthu konduthaan irukkiraarkal avakalaip poala naam ethaiyum thodara vaendaam, karai padintha kathalai Kadhalin ilakkanankalin vali kaluvi chuththappaduththi vaalkkaiyai thooymaiyaaka iyakkuvom.

காதலின் இலக்கணம்
UP Date
14

காதலின் இலக்கணம் என்றால் பலருடைய ஞாபகத்திற்கு வருவது ஏதோ அழகில்லாத இரண்டு முகங்கள் இச்சை மோகங்களையும், ஆசாபாசங்களையும் துறந்து ஆழமான அடி மனதின் அன்பால் பின்னிப் பிணைந்து வாழ்வதுதான் காதலின் இலக்கணம் என்று நினைக்கிறார்கள்

இச்சை மோகங்களை துறப்பதல்ல காதலின் இலக்கணம் இச்சை மோகங்களை மறப்பதுதான் காதலின் இலக்கணம் அப்படி வாழ்பவர்களிடமும் இக்சைகள் இருக்கும் அதையும் அனுபவிப்பார்கள் ஆனால் அவர்களின் உலகில் அதில் எந்த முக்கியத்துவமும் இருக்காது எனவே இலக்கணமான காதலில் நாமும் வாழ முடியும்

சுத்தமான காதல் என்பது சுத்தமான தண்ணீரை போன்றது அதில் இனிப்பு, புளிப்பு, தணுப்பு என்ற எந்த இச்சைகளும் கலக்கப்பட்டிருக்காது சுவை நிறைந்த குளிர்பானங்களை நாம் விரும்பி குடிப்பதை போல காதலிலும் இச்சைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம்

ஆனாலும் தண்ணீரை குடிப்பது எப்படி தவிர்க்க முடியாததோ அதே போல் சுத்தமான காதலை அனுபவிப்பதும் தவிர்க்க முடியாததுதான் அப்படிப்பட்ட தூய காதல் ஏற்படும் போது அதில் பல சுவைகளை கலந்து அனுபவிக்க ஆசைப்படுகிறோம் அப்போது அந்த காதலில் பிழை ஏற்பட்டு விடுகிறது பிழையான காதலை இன்னும் பிழையாக அனுபவிப்பதில்தான் ஆர்வத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம் எனவே அங்கே சுய நலமும், பொறாமையும் ஏற்பட்டு காதல் களங்கப்படுத்தப் படுகிறது

பல வித சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இளம் காதலர்கள் கடற்கரையில் விளையாடி கொண்டிருக்கும் போது காதலியை கடல் அலை இழுத்து சென்று விட்டால் நிச்சயமாக காதலனும் கடலில் குதித்து தன்னை மாய்த்துக் கொள்ளவும் தயாராகி விடுவான் அதற்காக அதை காதலின் இலக்கணம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது

வெறும் உணர்ச்சி வேகங்களால் ஏற்படுகின்ற அன்பும் காதல் மயக்கத்தில் காதலிக்காக உயிரை மாய்த்துவிடச் செய்யும் அந்த நிகழ்வுகளுக்கு இளமை வேகங்களும், உள்ளத்தின் உச்சமாக பதிந்திருக்கும் மோக அன்பும்தான் காரணமாக இருக்கும்

ஆப்பிள்பழச் சாறிலும், ஆறஞ்சுப்பழ சாறிலும் தண்ணீரும் கலந்திருப்பதை போல இவர்களுடைய பழக்கங்களிலும் காதல் கலந்திருக்கும் ஆனால் அது இலக்கணமில்லாத காதல் இவர்களால் அனுபவிக்க முடியாத இலக்கண காதலை நாம் அனுபவிக்க முடியும் அது நம்மால் சாத்தியமில்லாதது ஒன்றும் கிடையாது

ஒருவனுக்கு தான் வழிபடும் கடவுளிடம் உண்மையான நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் பின் எத்தனை மனமாற்று புத்தகங்களையும் கருத்துக்களையும் கேட்டாலும் தன் நம்பிக்கையை விட்டு விலகவே மாட்டார்கள் அதுதான் பக்தியின் இலக்கணம் காதலுக்கும் இதே நியதிதான்

உண்மையான சுயநலமில்லாத காதலன் காதலியிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான், எந்த நிபந்தனைகளையும் விதிக்க மாட்டான் உண்மையான பக்தன் கடவுளின் அன்பை பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதைப் போல காதலியின் அன்பு மட்டும்தான் இவர்களுடைய கண்ணிற்கு தெரிந்து கொண்டிருக்கும் அங்கே சுயநலம் பொறாமை போன்ற வியாதிகள் அவர்களை அண்டுவதில்லை

போட்டி போறாமைகள் இல்லாத போது காதலி தனக்கு கிடைக்காமல் வேறு ஒருவரோடு வாழும் நிலை வரும்போது கூட அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவள் சந்தோசமான வாழ்க்கையை நினைத்து பரிபூரணமாக வாழ்த்தி அனுப்புவார்கள் அவளுக்கு கிடைத்த நல்ல கணவனுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுவார்கள் அதை தங்களின் காதலின் வெற்றியாக எடுத்துக் கொள்வார்கள்

இது போன்ற வாழ்க்கையை அனுபவிக்கும் விருப்பங்களை நம் மனம் ஏற்றுக் கொள்ளுவதில்லை அதே நேரம் காதலின் இலக்கணத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் போது அனேக வெற்றிகளையும் ஆனந்தமான வாழ்க்கையையும் தக்கவைத்து அனேக அவமானங்களிலிருந்து நம்மை விடுவித்து கொள்ளலாம்.

காதல் இன்று களியாட்டங்களையும் இழி நோக்கங்களையும் கொண்டு நாசமடைந்து வருகிறது அதை கேவலப்படுத்துகிற இழியர்கள் இன்னும் அதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவகளைப் போல நாம் எதையும் தொடர வேண்டாம், கறை படிந்த காதலை காதலின் இலக்கணங்களின் வழி கழுவி சுத்தப்படுத்தி வாழ்க்கையை தூய்மையாக இயக்குவோம்.

LDN


மேலும் சிறப்புக் கட்டுரைகள்

Tags : காதலின், இலக்கணம், காதலின் இலக்கணம், Kadhalin ilakkanam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]